சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார்

1 mins read
4487d889-8007-4af1-9c12-2b076a2ea45e
-

அண்மைக்காலமாக எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்ளாமல் சமர்த்துப் பிள்ளையாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவரது நடிப்பில் 'செக்கச் சிவந்த வானம்' அடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் சிம்பு புதுப் படங்களில் நடிக்கத் தடை கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு அளித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை தயாரித்தவர். "இப்படத்துக்காக 60 நாட்கள் கால்‌ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்தார் சிம்பு. அவர் செய்த தாமதத்தால் படத்தை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்துக்கு அவர் தீர்வு கண்டாக வேண்டும்.

"தற்போது மணிரத்னம் படத்தை முடித்த கையோடு இயக்குநர் சுந்தர் சி. படத்தில் சிம்பு நடிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவரால் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு பதில் சொல்ல வேண்டும். அதுவரை அவர் படங்க ளில் நடிக்கத் தடை விதிக்க வேண் டும்," என்று மைக்கேல் ராயப்பன் தமது மனுவில் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உரிய முறை யில் மீண்டும் விசாரணை நடத்தி தனக்கு நியாயம் பெற்றுத்தர வேண் டும் என மைக்கேல் ராயப்பன் கோரி உள்ள நிலையில், சிம்பு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.