சாயிஷா: ஏமாற்ற மாட்டேன்

சாயிஷா: ஏமாற்ற மாட்டேன்

1 mins read
67832146-d2ff-4f1e-8b70-853357199b13
-
Google News Preferred Icon

மொழி தெரியாத நாயகிகள் படப் பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவர் வசனங்களை உரக்கச் சொல்வதைக் கேட்டு அதற்கேற்ப வாயசைத்து நடிப்பது வழக்கம். இதை 'ப்ராம்டிங்' என்பர். ஆனால் சாயிஷா இந்த ஏற்பாட்டை விரும்பு வதில்லை. "கேமரா முன்பு நிற் கும்போது அதன் பின்னே நின்றபடி ஒருவர் வசனத் தைச் சொல்ல, அதை அப்படியே திருப்பிச் சொல்வது என்பது ரசிகர் களை ஏமாற்றும் வேலை," என்கிறார். "வசனங்களை மனப் பாடம் செய்து பேசும்போது தான் ஒரு காட்சிக்குத் தகுந்த உணர்வுபூர்வமான நடிப்பு வெளிப்படும். எனவே செயற்கையான ஏற்பாடுகளை நான் விரும்புவதில்லை," என்று சொல்பவர் பிரபுதேவா இயக்கத் தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறாராம்.