நல்ல நடிகை என்று பெயர் எடுத்தி ருந்தாலும் பூர்ணாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றே கூற வேண்டும். காரணம், 'ஆடுபுலி', 'வேலூர் மாவட்டம்', 'வித்தகன்' உள்ளிட்ட பல படங்களில் அழகான, கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவருக்குரிய வாய்ப்புகள் என்னவோ தொடர்ந்து கிடைப்பதில்லை. இந்நிலையில் பெருத்துப் போயிருந்த தனது உடலை சற்றே இளைக்க வைத்துள்ளார் பூர்ணா. கடந்த சில வாரங்களாக இதன் பொருட்டு கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாராம். அதற்குப் பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் விதவிதமான ஆடைகளை அணிந்து தன்னைப் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் பரவ விட்டுள்ளார் பூர்ணா. அவற்றைக் கண்ட ரசிகர்கள் அவர் மிக அழகாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். கடைசியாக 'சவரக்கத்தி' படத்தில் இயக்குநர் ராமுக்கு ஜோடியாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருந்தார் பூர்ணா. இப்படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர். தமிழில் தமக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கும் என நம்புவதாகச் சொல்கிறார் பூர்ணா.
திடீரென உடல் இளைத்த பூர்ணா
1 mins read
-

