அனு: நான் நிச்சயமாகக் காதலிப்பேன்

அனு: நான் நிச்சயமாகக் காதலிப்பேன்

1 mins read
ed0dd785-06cb-4c83-87ca-897528d41465
-

காதலித்துத் திருமணம் செய்து கொள்வதே தனது விருப்பம் என்று கூறுகிறார் இளம் நாயகி அனு இமானுவேல். இதுவரை இவரைக் காதலிப்பதாக நான்கு பேர் கூறியுள்ளனராம். ஆனால் தாம் யாரையும் காதலிக்கவில்லை என்கிறார் அனு. 'துப்பறிவாளன்' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகும் சரித்திரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் காதல் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் அனு. "காதல் என்பது மிக அற்புதமான ஓர் உணர்வு. இரண்டு இதயங்களை அழகாகப் பிணைக்கும் உறவு. "வருங்காலத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இதை எனது குடும்பத்தாரிடமும் தெரிவித்துள்ளேன்," என்று அனு மனம் திறந்து கூறியுள்ளார்.