சசிகுமார், லட்சுமிமேனன் நடித்த 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது மீண்டும் சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அதற்கு 'கொம்பு வச்ச சிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சசிகுமார், ஆரவ், சூரி, யோகி பாபு நடிக்கின்றனர். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்தத் தகவலைக் கீர்த்தி சுரேஷ் தரப்பு மறுத்துள்ளது.
கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த 3 மாதங்களில் 3 பெரிய படங்கள் வெளியீடு காண இருக்கின்றன. விக்ரமுடன் நடித்த 'சாமி 2' படம் தற்பொழுது வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும் விஷாலுடன் நடித்த 'சண்டைக் கோழி 2' படம் அக்டோபர் 17ஆம் தேதியும் விஜய்யுடன் நடித்த 'சர்க்கார்' படம் நவம்பர் 6ஆம் தேதியும் வெளியாக உள்ளன. அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவற்றைத் தவிர வேறு எந்தப் படத்திலும் தான் ஒப்பந்தம் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார் கீர்த்தி.

