ஜெயம் ரவி கதாநாயகனாகவும் அரவிந்தசாமி வில்லனாகவும் நடித்து மோகன்ராஜா இயக்கிய படம் 'தனி ஒருவன்'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் மோகன்ராஜா திட்டமிட்டு இருக்கிறார். 'தனி ஒருவன்=2' படத்தில் மம்முட்டியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் நடிப்பதா, வேண்டாமா? என்று இன்னும் முடிவு சொல்லவில்லை. அவருடைய பதிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறார் ஜெயம் ரவி.
மம்முட்டி வில்லனாக நடிப்பாரா
1 mins read

