பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் தமிழிலும் 'மகாநதி' என்ற பெயரில் தெலுங்கிலும் உருவானது. இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கினார். "முதலில் இப்படத்துக்கு ரூ.16 முதல் ரூ.17 கோடி வரை செலவு செய்ய திட்டமிடப் பட்டது. வாழ்க்கைச் சரித்திர படத்துக்கு இதுவே பெரிய வரவுசெலவுத் திட்டம் ஆகும். ஆனாலும் படப்பிடிப்பு முடியும் போது மொத்த செலவு ரூ.29 கோடி ஆகியிருந்தது. என் மகள்கள்தான் தயாரிப்புப் பணிகளைக் கவனித்துக் கொண்டனர். செலவு பற்றி அறிந்தபோது வியப்பாகவே இருந்தது. ஆனால் படத்திற்கு கிடைத்த வரவேற்பில் இந்தத் தொகை சரிதான் என்ற முடிவுக்கு வந்தேன்," என்றார் நாக் அஸ்வின்.
சாவித்ரி படத்திற்கு ரூ.29 கோடி செலவு
1 mins read
-

