'அயர்ன் லேடி'யாக நித்யா மேனன்

1 mins read
c249c173-7b8a-46c3-a1d1-ddb9eb7163c1
-

காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க் கையைப் படமாக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் நிலை யில் இயக்குநர் பிரியதர்‌ஷினி நேற்று முன்தினம் 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை யைப் படம் எடுக்கப்போவதாக அறிவித்து சுவரொட்டியையும் வெளி யிட்டு இருக்கிறார். இயக்குநர்கள் பாரதிராஜாவும் ஏ.எல்.விஜய்யும் தனித்தனியாக இதற் கான அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களோடு இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநரான பிரியதர்‌ஷினியும் களத்தில் இறங்கினார். ஆனால் பிரியதர்‌ஷினிக்கு அந்த வாய்ப்புக் கிடைத்து உள்ளது. வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 'சக்தி' என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்‌ஷினி. படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப்போவதாக அறிவித்து 'தி அயர்ன் லேடி' என்று படத்திற்குத் தலைப்பு வைத்து சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அந்த சுவரொட்டியில் விரைவில் படத்தின் தொடக்கவிழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி இயக்குநர் பிரியதர்‌ஷினி கூறுகையில், "இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் இளவயது வாழ்க்கை முதல் மருத்துவமனையில் கழித்த இறுதி நாட்கள் வரை அனைத்தும் படமாக்கப்பட உள்ளன. அவரது திரைப்பட வாழ்க்கையைக் காட்டு வதற்காக அவர் நடித்த காலத்தில் கோடம்பாகத்தில் இருந்த திரைப்பட அரங்குகளைப்போல் பல அரங்குகளை உருவாக்க இருக்கிறோம்.