வெங்கட் பிரபு இயக்கத்தில் இளையர்களைக் கவரும் வகையில் உருவாகி வருகிறது 'பார்ட்டி' திரைப்படம். வழக்கமாக இவரது படங்களில் நடிப்ப வர்களில் சிவா, ஜெய் ஆகிய இருவர் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம் ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என ஒன் றுக்கு மூன்றாக கதாநாயகிகளைக் களம் இறக்கிவிட்டுள்ளார். "மூவரையும் கவர்ச்சிக்காக நடிக்க வைக்கவில்லை. ஆனால் இயல்பாகவே மூவரும் கவர்ச்சி யாகத்தான் இருக்கிறார் கள்," என்று சிரிக்கிறார் வெங்கட் பிரபு. "சற்றே ஆண் தன் மையோடு இருக்கும் இளம் பெண்ணாக ந டித்திருக்கிறேன் .
ஒரு வகையில் சவா லான கதாபாத்திரம் எனலாம். ஆனால் வெங்கட் பிரபு சார் சொன்னபடி நடித்த தால் எல்லாம் சுல பமாக அமைந்தது. " இ து வ ரை நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றி லும் மாறுபட்ட ஒன்று. அந்த வகை யில் இந்தப் படத் தில் நடித்ததில் மகிழ்ச்சி," என்கி றார் ரெஜினா.
சத்யராஜ், ஜெய ராம், நாசர், கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன் , சுரேஷ் என மேலும் பலர் இந்தப் படத் தில் நடித்துள்ள னர். கோவாவில் நடக்கும் சம்பவங்களை வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது. எனினும் அங்கு படப்பிடிப்பு நடத்தாமல் பிஜி தீவில் முழுப் படத்தையும் எடுத்துள்ளனர். மொத்தம் 57 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. "அது அருமையான தீவு. ஒரு வகையில் பணக்காரர்களுக்கான பூமி என்றும் சொல்லலாம். அங்குள்ளவர்கள் வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்கிறார்கள்.

