"பழங்குடியினர் ஆதியில் இருந்து இப்போது வரை ஒரு வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அது மரம் நடு வது. அவர்கள் சந்ததியில் எப்போது குழந்தை பிறந்தாலும் உடனே ஒரு மரத்தை நடுவார்கள். அதற்கு ஒரு பெயரையும் வைப்பார்கள். அதனால் தான் இன்றளவும் உலகில் இயற்கை அழகும் செல்வமும் நீடித்து வருகிறது," என்று காடுகளின் தன்மை குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சமமாகப் பேசுகிறார் மங்களேஸ்வரன். இவர் புதுமுகங்கள் நடிக்கும் 'மரகதக்காடு' படத்தின் இயக்குநர். எங்கே இருக்கிறது அந்த 'மரகதக் காடு'?
"அது ஒரு குறியீடு. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக் கும் காணி இன பழங்குடி மக்களின் நம்பிக்கையையும் வாழ்வியலையும், கனிம வளங்களைப் பாதுகாக்க வேண் டியதன் அவசியத்தையும் இரண்டு உண்மைச் சம்பவங்கள் வழியாக இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். "அடர்த்தியான காடுகள், அருவி என படத்தில் இடம்பெறும் காட்சிகள் பிரமிக்க வைக்கும். இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த கே.ரகுநாதன் சாருக்கு சிறப்பு நன்றி." காடுகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளன. இதில் என்ன சிறப்பு?
"பெரும்பாலும் இத்தகைய படங்க ளில் பெரிய நாயகர்கள் நடித்திருப் பார்கள். அதனால் கதைகளும் அவர் களை மையப்படுத்தி இருக்கும். 'மரகதக்காடு' அப்படியல்ல. புதுமுகங் கள் நடித்துள்ளனர். எனவே கதையில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளோம். "வளர்ச்சி என்பது ஒன்றை அழித்து விட்டு இன்னொன்றை உருவாக்குவ தல்ல. இருப்பதை மேம்படுத்தி இன் னொன்றை உருவாக்குவது. இதைத் தான் இந்தப் படம் எடுத்துச் சொல்லப் போகிறது.
"காடு உள்ளிட்ட இயற்கை கொடை எதுவும், எந்த அரசுக்கும் சொந்தமல்ல. காட்டைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என அழுத்தமாக சொல்லியிருக் கிறோம்," என்கிறார் மங்களேஸ்வரன்.

