பிரபல பாடகி வாணி ஜெயராமின் கணவர் காலமானார்

பிரபல பாடகி வாணி ஜெயராமின் கணவர் காலமானார்

1 mins read
28658378-8dce-4836-8fc5-444955d41548
-

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். தமிழகத்தின் வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்தவரான வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் சுமார் 10,000 பாடல்களைப் பாடி உள்ளார். கலைவாணி என்ற இயற்பெய ரைக் கொண்ட வாணி ஜெயராம், திருமணத்திற்குப் பிறகு தனது வாணி என்ற பெயருடன் கணவரின் பெயரைச் சேர்த்து வாணி ஜெயராம் என மாற்றிக்கொண்டார். பின்னர் அப்பெயர் அவருக்கு நிலையாகி, புகழைத் தேடித் தந்தது. திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய வாணி ஜெயராம், தனது பாடும் திறமையை வளர்த்துக் கொள் வதற்காக மீண்டும் தமிழகம் வந்தார். இவருடைய கணவர் ஜெயராமின் மரணச் செய்தி பலரையும் வருத்தம் அடைய வைத்துள்ளது.