நீது: அப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம்

நீது: அப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம்

1 mins read
832c4c6d-a827-4fbd-9c6e-559766210c94
-
Google News Preferred Icon

இனி நல்ல நடிப்பை வெளிப் படுத்தக்கூடிய வாய்ப்புகளை மட்டுமே ஏற்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் நடிகை நீது சந்திரா. ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடக் கேட்டு இனி யாரும் தம்மை அணுகவேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். 'யாவரும் நலம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'ஆதி பகவன்' உள்ளிட்ட படங்களில் நீது சந்திராதான் கதாநாயகி. வாய்ப்புகள் குறையத் தொடங்கவே ஒற்றைப் பாடலுக்கு நடனமாடத் தொடங்கினார். ஆனால் 'சிங்கம்-3' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியபிறகு அதேபோன்ற வாய்ப்புகள்தான் தேடி வந்தனவாம். "நடிகையாக என்னை முன்னிறுத்தவேண்டும் என்பதற்காக ஹாலிவுட் சென்று 'டாம் டிரேயர்' என்ற முன்னணிக் கலைஞரிடம் நடிப்புக் கலையைக் கற்றுவந்துள்ளேன். தற்போது ரேகா பரத்வாஜ் இயக்கும் இந்தி இசைத் தொகுப்பில் நடிக்கிறேன். இனி நல்ல கதா பாத்திரத்தில் மட்டுமே என்னைப் பார்க்கமுடியும்," என்கிறார் நீது.