பிரபுதேவா படத்தில் இணைந்த நந்திதா

பிரபுதேவா படத்தில் இணைந்த நந்திதா

1 mins read
51c63407-8f11-4b4c-b331-ebcc4a001049
-

பிரபுதேவா நடிப்பில் உருவான 'தேவி' தயாரிப்பு தரப்புக்கு லாபம் அளித்த படம். ஏ.எல். விஜய் இயக்கிய இப்படத்தில் தமன்னா நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளனர். இத்தகவலை பிரபுதேவா தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படத்தில் தமன்னாவுக்குப் பதிலாக நந்திதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளாவும் ஒப்பந்தமாகி உள்ளார். "தற்போது வைபவ் ஜோடியாக 'டாணா'வில் நடித்து வருகிறேன். பிரபுதேவா போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. "மேலும், எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதா பாத்திரத்தை அமைத்துள்ளார் ஏ.எல். விஜய். பிரபுதேவா சாருடன் இணைந்து நடனமாட வேண்டியிருக்கும் என்பதை நினைத்தால் படபடப்பாகவும் பரவசமாகவும் உள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதுவும் வெற்றிபெறும்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நந்திதா.