புதுமுகம் ராஜ்குமார் நாயகனாக நடிக்கும் படம் 'கூத்தன்'. நாயகிகளாக ஸ்ரீஜிதா, சோனால், கீரா நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகேந்திர பிரசாத், முல்லை, கோதண்டம், பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜூனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி என திரையுலகப் பட்டாளத்தையே இயக்குநர் வெங்கி களமிறக்கி உள்ளார். "திரையுலகில் நடனமாடும் துணை நடிகர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம் இது. சினிமாவைப் பின்னணியாகக் கொண்டு இதுவரை நிறைய படங்கள் வந்திருந்தாலும் இது புதிய கோணத்தில், இதுவரை இல்லாத வகையில் துணை நடிகர்களின் வாழ்க்கையைப் பேசும் படமாக இருக்கும்," என்கிறார் வெங்கி. இப்படத்துக்கு பாலாஜி இசையமைக்கிறார்.
துணை நடிகர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் 'கூத்தன்'
1 mins read
-

