விஷால்: எனக்காக எழுதப்பட்ட கதையல்ல

விஷால்: எனக்காக எழுதப்பட்ட கதையல்ல

2 mins read
605174ea-cfd6-4bba-bf21-053800129302
-
Google News Preferred Icon

வருங்காலத்தில் இயக்குநராக வேண்டும் என்பதே தமது கனவு என விஷால் மீண்டும் உறுதிப் படுத்தி உள்ளார். அதேசமயம் தான் படம் இயக்கு வது தாமதமானாலும் கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தை இயக்குவது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார். 'சண்டக்கோழி-2' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை யில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விஷால் ஒரு படம் வெளியான மூன்று தினங்களுக்குப் பிறகு அது குறித்த விமர்சனத்தைத் திரை விமர்சகர்கள் வெளியிட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு நன்மை பயக்கும் என்றார்.

"தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன். மூன்று தினங்க ளுக்குப் பிறகு படத்தை விமர் சியுங்கள். அப்போதுதான் சிறிய படம், பெரிய படம் என எதுவாக இருந்தாலும் ரசிகர்களிடம் வர வேற்பு கிடைக்கும். "நான் அனைவரையும் சொல்ல வில்லை. குறிப்பிட்ட சிலரை மனதில் வைத்தே இந்த வேண்டு கோளை விடுக்கிறேன்," என்றார் விஷால். 'சண்டக்கோழி' கதை இவருக் காக எழுதப்பட்ட கதை அல்லவாம். சூர்யா அல்லது விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணத்துடன் எழுதப் பட்டதாகக் குறிப்பிட்டார். "இப்படி ஒரு கதை உருவாகி இருப்பதை அறிந்து நான்தான் இயக்குநர் லிங்குசாமியை அணுகி னேன். அவரும் என்னை ஏற்றுக் கொண்டு அதிரடி நாயகனாக என்னை உருவாக்கி, ரசிகர்கள் முன்கொண்டு வந்து நிறுத்தி விட்டார். "இது எனக்கு 25ஆவது படம். இது எனது திரை வாழ்க்கையில் முக்கியமான படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. "கீர்த்தியுடன் இணைந்து நடித்ததில் பெருமைப்படுகிறேன். அவர் மிகச்சிறந்த நடிகை. கூடிய விரைவில் நான் படம் இயக்குகி றேனோ இல்லையோ கீர்த்தி சுரேஷ் இயக்குநராகி விடுவார்," என்றார் விஷால்.