'அஜீத் ரசிகர்கள் கொண்டாடப் போகும் படம்'

2 mins read
36e94535-a540-4458-8ca8-485860fd3461
-

ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது 'பில்லாபாண்டி'. ராஜ் சேதுபதி இப்படத்தை இயக்கியுள்ளார். நிஜத்தில் அஜீத்தின் தீவிர ரசிகரான சுரேஷ் இப்படத்திலும் அஜீத் ரசிகராகவே நடித்துள்ளா ராம். கே.சி. பிரபாத் இப்படத்தைத் தயாரித்துள்ளார். தவிர, முக்கிய கபாதாத்திரம் ஒன்றிலும் நடித் துள்ளார். அனைத்தலப்பட்டி என்ற ஊரில் இப்படத்தின் கதை நடப் பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. "ஊரின் பெயரிலேயே தல என்று இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நிறைய அஜீத் ரசிகர்களைக் காண முடிந்தது. அவர்கள் படப்பிடிப்பை ஆர்வத்து டன் கண்டு ரசித்ததுடன் தேவை யான உதவிகளையும் செய்தனர். இந்தப் படத்துக்கு அஜீத் ரசி கர்கள் மட்டுமல்லாமல் அனை வருமே ஆதரவளிப்பர் என உறுதியாக நம்புகிறோம்," என்கி றார் ஆர்.கே. சுரேஷ். அஜீத்தின் அருமை பெருமைக ளையும், அவரது ரசிகர்கள் செய்து வரும் தன்னார்வத் தொண்டுகளையும் விவரிக்கும் விதமாக திரைக்கதை அமைத் துள்ளார் இயக்குநர் ரா|ஜ் சேதுபதி. எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையின்போது இப்படம் வெளியீடு காண உள்ளது.

படத்தில் இடம்பெறும் 'எங்க குல தங்கம்' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்க ளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு அஜீத் ரசிகர்கள் திரையரங்குகளில் குத் தாட்டம் போடப்போவது உறுதி என படக்குழுவினர் கூறுகின்ற னர். இப்படத்தில் சூரியும் விதார்த்தும் கௌரவ வேடங்க ளில் நடித்துள்ளனர். 'மேயாத மான்' இந்துஜாவும் சாந்தினியும் நாயகிகளாக நடிக்க, தம்பி ராமையா, சரவணன் தம்பி அமுதவாணன், சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்றுள்ளனர். "குறிப்பிட்ட தரப்பினர் மட் டுமே காணும் வகையில் இப் படத்தை உருவாக்கவில்லை. இது அனைவருக்குமான படம். எனினும் அஜீத் ரசிகர்கள் தனிப் பட்ட வகையில் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை," என்கிறார் இயக் குநர் ராஜ் சேதுபதி.