காஜல் அகர்வால் மிகச்சிறந்த நடிகை என்று பாராட்டி உள்ளார் நடிகரும் இயக்குநருமாகிய ரமேஷ் அரவிந்த். தற்போது அவர் இயக்கி வரும் 'பாரிஸ் பாரிஸ்' தமிழ்ப் படத்தில் காஜல் தான் கதாநாயகி. இந்தப் படம் தனது திரைப்யணத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று ஒரு பக்ககம் காஜல் சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கம் ரமேஷும் இதை ஆதரிக்கிறார். காரணம் இப்படத்துக்காக அற்பு தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம் காஜல். அதனால் பார்ப்பவர்களிடம் எல்லாம் தனது கதாநாயகியைப் புகழ்ந்து தள்ளுகிறார். இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'குயின்' படத்தை தான் தற்போது தமிழ், தெலுங்கு மலையாளம், கன்ன டம் ஆகிய நான்கு மொழிகளில் மறுபதிப்பு செய்து வருகின்றனர். தமிழில் காஜல் நாயகி என்றால், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத் தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பாருள் யாதவும் நாயகிகளாக நடிக் கின்றனர். இம்மூவரைத் தவிர எமி ஜாக்சன் நான்கு மொழிகளிலுமே முக்கிய கபாதாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.
மலையாளப் பதிப்பை நீலகண்டன் இயக்குகிறார். தெலுங்கு பதிப்பு பிர சாத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. "நீண்ட நாட்களாக இப்படியொரு படத்துக்கும் கதாபாத்திரத்துக்காக வும்தான் காத்துக் கிடந்தேன். அந்த வாய்ப்பு தற்போது அமைந்ததில் மகிழ்ச்சி. "கடந்த ஓராண்டாகவே கதாநாய கிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் இருந்தது. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாய்ப்பை அளித்துள்ளார் ரமேஷ் அரவிந்த். அவர் சொன்னது போலவே இது திருப்புமுனை படம்தான். எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழு வுக்கும் இப்படம் நல்ல பாதையைக் காட்டும்," என்கிறார் காஜல்.

