பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான் ஜோடி சேர்ந்துள்ள படம் 'ஜருகண்டி'. நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். வேறொரு கதைக்குத் தேர்வு செய்திருந்த தலைப்பை இந்தப் படத்துக்காக விட்டுக் கொடுத்தாராம் இயக்குநர் வெங்கட் பிரபு. "நான் வெங்கட் சாரிடம் பணியாற்றியவன். உதவியாளர் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு நண்பராகவும் எனக்குப் பலவகையிலும் அவர் ஆதரவளித்துள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். 'வேகம்', 'ரன்', 'ஸ்பீடு' என பல தலைப்புகளில் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த வரிசையில் 'ஜருகண்டி' வரப்போகிறது," என்கிறார் இயக்குநர் பிச்சுமணி.
விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள 'ஜருகண்டி'
1 mins read
-