உலகம் முழுவதும் நாளை வெளி யாகிறது 'பரியேறும் பெருமாள்'. பா. ரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்துக்காக பட்ட சிரமங்களுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 'மாலை நேரத்து மயக்கம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவ ருக்கு இது இரண்டாவது படம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு கிராமத்து வாழ்க்கை குறித்து அறவே தெரியாதாம். அத னால் 'பரியேறும் பெருமாள்' தமக்குப் பல வகையிலும் பாடமாக இருந்தது என்கிறார்.
"இப்படத்தின் கதையைக் கேட்ட வுடன் வழக்கமான பாணியில் ஒளிப் பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக் கெட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பெரும்பாலான காட்சிகளை நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் படம்பிடித்தோம். "அந்தந்த ஊர்களில் பசுமை, வறட்சிப் பகுதிகள், வெயில், மனிதர் கள், விலங்கினங்கள் என அனைத் தையும் அப்படியே படமாக்கவேண்டும் என்று விரும்பினேன். கூடவே அழகியலும் இருக்கவேண்டும் என்று ஆசை. கதைக்களம், அதன் வேகம் ஆகியவற்றுக்கு ஏற்ப சில புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி யுள்ளோம்," என்கிறார் ஸ்ரீதர். இப்படத்துக்காக 40 கிலோ எடை கொண்ட கேமரா உபகரணங்களைத் தோளில் சுமந்தபடியே காட்சிகளைப் படமாக்க வேண்டி இருந்ததாம். இவ் வாறு சிரமப்பட்டாலும், எடுத்த காட்சி களைத் திரையில் பார்த்தபோது மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்பட்ட தாகச் சொல்கிறார்.
"எந்த இடத்திலும் அந்த நிலத்தின் நிறம் மாறாமல், அதை அப்படியே திரையில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றன. அவற்றைப் படம் பிடிக்க புதிய தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. "குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான படமாக 'பரியேறும் பெருமாள்' உருவாகியுள்ளது," என்கி றார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.
'பரியேறும் பெருமாள்' படத்தில் கதிர், கயல் ஆனந்தி.

