பாடலாசிரியராக மாறிய ஆண்ட்ரியா

பாடலாசிரியராக மாறிய ஆண்ட்ரியா

1 mins read
31ab4dd2-a9e3-43ee-9f1d-39ad8b3d12f7
-

சினிமாவில் நடித்தபடியே இசைத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. ஏற்கெனவே இவர் திரைப்படங்களில் சில பாடல்கள் பாடியிருப்பது தெரியும். இந்நிலையில் பாடலாசிரியராகவும் அவதாரமெடுத்துள்ளார். அண்மையில் 'ஹானஸ்ட்லி' என்ற இசைத்தொகுப்பு ஆண்ட்ரியாவின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது. இதற்காக தாமே சொந்தமாகப் பாடல் எழுதிப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் லியாண்ட் ஜேம்ஸ் மற்றும் கிடார் இசைக்கலைஞர் கெபா ஜெரிமியா ஆகியோரின் பங்களிப்பும் இப்பாடலில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற பாடல்களை வெளியிட வேண்டும் என்பதுதான் ஆண்ட்ரியாவின் விருப்பமாம். தற்போது 'ஹானஸ்ட்லி' பாடலின் ஆங்கிலப் பதிப்பு இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். "பாடலும் அதற்கான வரிகளும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி இருப்பது உற்சாகமளிக்கிறது. இதுபோன்ற பாராட்டுகள் தான் நம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கும். அந்த வகையில் ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்," என்கிறார் ஆண்ட்ரியா.