இளம் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு தெலுங்கிலும் தமிழிலும் நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகத் தகவல். மிஷ்கின் இயக்கத்தில் 'முகமூடி' மூலம் கோடம்பாக்கத்துக்கு அறிமுகமானவர் இவர். அதன்பிறகு தமிழில் பார்க்க முடியவில்லை என்றாலும் தெலுங்கில் அசத்திக் கொண்டிருக்கிறார் பூஜா. இந்தியிலும் கூட ஒன்றிரண்டு வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக 'அரவிந்த சமேதா' என்ற படத்தில் நடித்துள்ளார் பூஜா. இதில் இடம்பெற்றுள்ள நீச்சல் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பாம். இதையடுத்து தெலுங்கில் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும் நிலையில் தமிழ் தயாரிப்பாளர்களும் பூஜாவை மொய்க்கத் தொடங்கியுள்ளனர். அவர் கேட்கும் சம்பளத்தைத் தயக்கமின்றித் தரவும் கோடம்பாக்கப் புள்ளிகள் முன்வந்துள்ளனர். இதனால் உற்சாகத்தில் மிதக்கிறார் பூஜா ஹெக்டே.
மீண்டும் தமிழுக்கு வரும் பூஜா ஹெக்டே
1 mins read
-

