சுஜா: நீண்ட நாள் ஏக்கம் பூர்த்தியானதில் மகிழ்ச்சி

சுஜா: நீண்ட நாள் ஏக்கம் பூர்த்தியானதில் மகிழ்ச்சி

1 mins read
d51956fb-98c8-4b52-b1e8-8230a0a9d521
-

நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பு தற்போது பூர்த்தி அடைந்துள்ளதாக சுஜா வருணி தெரிவித்துள்ளார். பல படங்களில் சிறு வேடங்களில் நடிப்பது, ஒற்றைப் பாடலுக்கு நடன மாடுவது என்று கோடம்பாக்கத்தில் நாட்களைக் கடத்தி வந்த சுஜா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்ல பாத்திரங்களில் மட்டுமே நடிக்கப்போவதாக அறிவித்தார். அவர் எதிர்பார்த்தபடி அதிக வாய்ப்புகள் தேடி வரவில்லை என்றா லும் சுஜாவின் நடிப்புப் பசிக்கு ஓரளவு தீனி போடும் வகையில் சில படங்கள் அமைந்தன.

தற்போது தாமிரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண் தேவதை' படத்தில் நடித்துள்ளார் சுஜா. இன் றைய சமூகத்தில் ஒரு பெண் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரண மாக இவரது கதாபாத்திரம் அமைக் கப்பட்டுள்ளதாம். "இப்படத்தின் கதையை இயக்குநர் சொல்லி முடித்த அடுத்த நொடியே இதில் நடிக்கவேண்டும் எனும் எண் ணம் மனதில் தோன்றியது. ஏற்கெனவே தாமிரா இயக்கியுள்ள 'ரெட்ட சுழி' எனக்கு மிகவும் பிடித்தமான படம். அதில் வரும் அஞ்சலி கதா பாத்திரத்தைக் கண்டபோது நமக்கு இப்படியெல்லாம் நல்ல பாத்திரங்கள் அமையவில்லையே எனும் ஏக்கம் ஏற்பட்டது. எனினும் தற்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி உள்ளது," என்கிறார் சுஜா வருணி.