'ஏ' சான்றிதழுடன் வெளியாகிறது தனு‌ஷின் 'வட சென்னை'

'ஏ' சான்றிதழுடன் வெளியாகிறது தனு‌ஷின் 'வட சென்னை'

1 mins read
b5dd8075-41f5-4138-b415-884c34e1ea3f
-
Google News Preferred Icon

தணிக்கையின்போது எந்தவிதமான வெட்டும் இன்றி தப்பித்துள்ளது 'வடசென்னை'. இது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம். தயாரிப்பாளரும் தனுஷ்தான். இப்படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் பரவியது. எனவே தணிக்கைத் துறையினர் பல காட்சிகளை வெட்டிவிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் 'ஏ' சான்றிதழுடன் படம் வெளியாக இருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 16ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. சரஸ்வதி பூசையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. மொத்தம் மூன்று பாகங்களாக இப்படம் வெளியாகிறது. இதில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.