காதலை தேடி நித்யா நந்தா

காதலை தேடி நித்யா நந்தா

1 mins read
b209891c-f4d8-4511-839c-422dba01b8fe
-

அழகான காதலும் திகிலும் நிறைந்த படமாக உருவாகிறது 'காதலை தேடி நித்யா நந்தா'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படம் இது. இதில் ஏடாகூடமான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக அவ்வப் போது தகவல்கள் வெளியாகின. பொது வாக இத்தகைய தகவல்களை இயக்குநர்கள் மறுப்பதும் மறைப்பதும் தான் வாடிக்கை. ஆனால் ஆதிக் இதற்கு நேர்மாறாக உள்ளார். இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று பார்க்க முடியாது என அவரே ஒப்புக் கொள்கிறார்.

"இந்தப் படத்துக்குப் பூசை போட்ட அன்றே பல விஷயங் களைத் தெளிவாகச் சொல்லி விட்டேன். இது இளையர்களுக் கான படம். எனவே இளம் பெண்களும் ஆண்களும் மட் டும் திரையரங்கிற்கு வந்தால் போதும். "குடும்பத்துடன் யாரும் வரவேண்டாம். எனினும் வருங்காலத்தில் நல்ல குடும் பப்படங்களை இயக்குவேன் எனும் நம்பிக்கை உள்ளது," என்கிறார் ஆதிக். இந்தப் படம் இதுவரை நீங்கள் பார்த்திராத காவியம். தமிழ்ச் சினிமாவில் புது முயற்சி என்றெல்லாம் விளம்பரப்படுத்துவ தில் இவருக்கு உடன்பாடு இல்லை யாம். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ஜி.வி. பிரகா‌ஷிடம் இந்தக் கதையைச் சொல்லி இருக்கிறார். உடனே இக்கதையில் நடிக்கத் தயார் என்றாராம் ஜி.வி.