தாம் நடிக்கும் படங்கள் தோல்வி அடைவது வருத்தம் அளித்தாலும் அவற்றின் மூலம் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார் அனுபமா பரமேஸ்வரன். 'பிரேமம்' மலையாளப் படம் மூலம் அறிமுகமான இவர் தமிழில் 'கொடி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுடன் இவர் மோதல் போக்கை கடைபிடித்ததாக செய்தி வெளியானது. ஆனால் அனுபமா இதை திட்டவட்டமாக மறுத்தார்.
இந் நிலையில் மீண்டும் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். "பிரகாஷ்ராஜுடன் 6 மாதம் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளேன். எனக்கு அவர் சிறு அறிவுரை கூறினார். அதை வைத்து சிலர் பிரச்சினை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். "இப்படியொரு தகவல் வெளியான பிறகும்கூட 25 நாட்கள் இருவரும் படப்பிடிப்பில் இணைந்து நடித்துள்ளோம். "ஒரு படத்தில் எத்தனை நாயகிகள் இருக்கிறார்கள் என்று பார்ப்பது இல்லை. என் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை மட்டுமே கவனிப்பேன். வித்தியாசமான கதாபாத்திரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதே எனது பேராசை," என்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

