நான்கு கதைகளை விவரிக்கும் புதுப்படம்

நான்கு கதைகளை விவரிக்கும் புதுப்படம்

1 mins read
f92ed3ca-b6aa-41af-ba4b-450f0d23c74b
-

'சில்லு கருப்பட்டி' என்ற தலைப் பில் புதுப்படம் உருவாகி வருகி றது. ஹலீதா ஷமீம் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே 'பூவரசம் பீபீ' படத்தை இயக்கியவர். இரண் டாவது படத்தில் சமுத்திரகனி யுடன் சுனைனா ஜோடி சேர்ந் துள்ளார். இதில் நான்கு வெவ்வேறு கதைகளை விவரிக்கப் போகிறா ராம் இயக்குநர். அவற்றுள் ஒரு கதையில் சமுத்திரக்கனியும் சுனைனாவும் இடம்பெற்றுள்ளனர். நடுத்தர வயது தம்பதியராக நடிக்கின்றனராம். "நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சராசரி தம்பதியரின் வாழ்வியலை இதில் பதிவு செய் கிறோம். இருவரும் மிக கச்சிதமான, பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் ஓர் இயக்குநராக எனக்கு மிகுந்த திருப்தி ஏற்பட் டுள்ளது.

"இவர்களுடன் 'ஓகே கண் மணி' படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையி லும், 'தெய்வ திருமகள்', 'சைவம்' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுக மாகி ரசிகர்களின் பாராட்டையும் பாசத்தையும் பெற்ற சாரா அர்ஜுன் ஒரு கதையிலும் நடிக்கின்றனர். "மற்றொரு கதையில் நிவேதிதா, சதீஷ், மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களு டன் மகா, ஸ்ரீராம், ராகுல் ஆகியோரும் முக்கிய கதாபாத்தி ரங்களை ஏற்றுள்ளனர். அனை வரது கதாபாத்திரமும் மிக நேர்த் தியாகச் செதுக்கப்பட்டுள்ளன," என்கிறார் ஹலீதா ஷமீம்.

சமுத்திரக்கனி, சுனைனா.