மீண்டும் ஒரு தொடக்கம்போல் உணர்கிறேன்: தமன்னா

திரையுலகில் 21 ஆண்டுகள்

மீண்டும் ஒரு தொடக்கம்போல் உணர்கிறேன்: தமன்னா

1 mins read
39bebbaa-099c-4aec-962b-e6319e86294d
நடிகை தமன்னா. - படம்: பின்டர்ரஸ்ட்
multi-img1 of 2

2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘சந்த் ஷா ரோஷன் செஹ்ரா’ என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய நடிகை தமன்னா, தற்போது சினிமாவில் 21 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் அவர், தற்போது இந்திய அளவில் ஒரு முக்கிய நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

இந்த மைல்கல்லை எட்டியது குறித்து நெகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சினிமாவில் 21 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும், நான் என் பயணத்தை மீண்​டும் புதி​தாகத் தொடங்​கு​வதைப் போன்றே உணர்​கிறேன். பல நடிகர்களுக்கு, குறிப்பாகப் பெண் கலைஞர்களுக்கு இத்தனை நீண்ட காலம் நீடித்து நிலைத்து நிற்கும் வாய்ப்பு அமைவது அரிது,” என அவர் தெரிவித்துள்ளார்.

தனது வெற்றிக்குத் தென்னிந்திய ரசிகர்கள் அளித்த பேராதரவே மிக முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ள தமன்னா, அவர்கள் காட்டும் அன்பு தன்னை இன்னும் உற்சாகமாக உணர வைப்பதாகக் கூறியுள்ளார்.

அடுத்தடுத்துப் பல படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பிற்குத் தான் எந்த வழியில் திருப்பிச் செய்ய முடியும் என்பதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

21 ஆண்டுகளைக் கடந்தும் அதே இளமையோடும் வேகத்தோடும் செயல்பட்டு வரும் தமன்னாவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்