'யாரும் நிர்ப்பந்திக்கவில்லை'

1 mins read
b2265c11-94d2-4a08-8bc4-1ebcd3382db0
-

நல்ல மாற்றத்துக்கான நேரம் தற்போது வந்துள்ளது என்கிறார் நடிகை ஆன்ட்ரியா. பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். 'மீ டூ' இயக்கம் கோடம்பாக்க வட்டாரங் களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் யாரேனும் ஒருவர் மீது பெண் கலைஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியால் தொடங்கிவைக்கப்பட்ட இந்தப் பஞ்சாயத்து இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சின்மயி, சுருதி ஹரிஹரன் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை கள் குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆன்ட்ரியாவும் 'மீ டூ' குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"மீ டு இயக்கம் என்பது ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட வாய்ப்பே இல்லை. "ஏனெனில் அப்போது இதற்கான சாதகமான சூழ்நிலை நிலவ வில்லை. தற்போது நிலைமை மாறியிருப்பதாக நினைக்கிறேன். "சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி என்னைத் தவறான நோக்கத்துடன் யாரும் அணுகவில்லை. மேலும், தங்களின் பாலியல் இச் சைக்கும் என்னை நிர்ப்பந் தித்ததில்லை," என்று ஆன்ட்ரியா தெரிவித்துள் ளார்.