ராஞ்சனா: மிகவும் சிரமப்பட்டு நடித்தேன்

1 mins read
dbfebd90-1574-4882-bbc3-d67842ae5082
-

தாம் நடிகையானது ஒரு விபத்து மாதிரிதான் என்கிறார் இளம் நாயகி ராஞ்சனா. 'மரகதக்காடு' படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமாகியுள்ள இவ ருக்கு, நல்ல எதிர்காலம் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித் துள்ளனர். ராஞ்சனாவின் சொந்த ஊர் மங்களூரு. எனினும் வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூருவில் தானாம். இவரது பெற்றோர் இருவரும் அரசு உயர் அதிகாரிகள் ஆவர். ஒரே தங்கை கல்லூரியில் படித்து வருகிறார். பட்டப்படிப்பை முடித்த ராஞ்ச னாவுக்கு பரதநாட்டியம் அத்துப்படி. கல்லூரி நாட்களில் எந்தக் கலை விழாவாக இருந்தாலும் இவர் நிச்சயம் பங்கேற்பாராம்.

"எங்கள் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அதனால் தான் நான் சினிமாவில் கால் பதித்ததை விபத்து என்கிறேன். "கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அப்போது நடிக்கக் கூடாது என பெற்றோர் தடை விதித்துவிட்டனர். "அதனால்தான் சற்று தாமத மாக நடிக்க வந்திருக்கிறேன்," என்கிறார் ராஞ்சனா. 'மிஸ் கர்நாடகா', 'மிஸ் சவுத் இந்தியா' உள்ளிட்ட அழகுப் போட்டிகளில் வெற்றிவாகை சூடி யுள்ளார் இவர். அதன் பலனாக 'பிரேம பல்லக்கி' என்ற கன்னடப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.