தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்கள் கண்டு ரசித்த 'எழுமின்'

1 mins read
1b1e43f9-dc50-4963-b092-47fe4ea50e93
-

அண்மையில் வெளியாகி உள்ள 'எழுமின்' திரைப்படத்தை ஆயிரம் பள்ளி மாணவ, மாணவி யர் பார்த்து ரசித்தனர். இப்படத் துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வி.பி.விஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'எழுமின்'. தற்காப்புக் கலையின் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது. விவேக், தேவயானி முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் அங்குள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் இப்படத்தைக் கண்டு ரசித்தனர்.

இளம் வயதினர் தற்காப்புக் கலைகளை கற்றுத் தேற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதைப் பாராட்டும் விதமாக மாணவ, மாணவியர் இப்படத்தைக் காண ஏற்பாடு செய்துள்ளார் அப்பள்ளியின் தாளாளர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் இத்திரைப்படத்தைக் காண வேண்டும் எனவும், இதற்கேற்ப சிறப்புக் காட்சிகளைத் திரையிட, திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் 'எழுமின்' படத்தின் தயாரிப்பா ளரும் இயக்குநருமான வி.பி.விஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே எழுமின் படத்திற்கு கிடைத்து வரும் வர வேற்பும் விமர்சகர்களின் பாராட் டுகளும் மிகுந்த உற்சாகம் அளிப் பதாக நடிகர் விவேக் தெரி வித்துள்ளார். தரமான படங்க ளுக்கு ரசிகர்களின் ஆதரவு நீடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

'எழுமின்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் விவேக், தேவயானி.