தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷின் கொடிதான் உயரப் பறந்துகொண்டி ருக்கிறது. பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படம், நல்ல கதையம்சம் உள்ள படம் என்றால் உடனே கீர்த்தியின் கால்ஷீட் கிடைக்குமா? என்றுதான் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் யோசிக்கி றார். தனது தாய் மேனகா தமிழ்த் திரையுலகில் எட்ட முடியாத இடத்தையும் புகழையும் மூன்று ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கதை சொல்வதற்காக தினமும் இவரைத் தேடி வரும் இயக்குநர்கள், கதாசிரிய ரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. படப்பிடிப்பு பரபரப்புக்கு மத்தியிலும், இவர்களைச் சந்தித்துப் பேசுகிறார் கீர்த்தி. தமிழில் இவரது நடிப்பில் வெளிவரும் பனி ரண்டாவது படம் 'சர்கார்'. விஜய் (2 படங்கள்), சூர்யா, விஷால், விக்ரம், தனுஷ், சிவ கார்த்திகேயன் (3 படங்கள்), விக்ரம் பிரபு என்று தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
மூன்றாண்டு கால சினிமா பயணம் எப்படி இருக்கிறது? என்று கேட்டால், தமிழில் அறிமுக மாகி 3 ஆண்டுகள்தான் ஆகிறது என்றாலும், அதற்கும் முன்பே மலையாளத்தில் நடிக்கத் துவங்கிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார். "உண்மையைச் சொல்வதானால் நான் கேமராவுக்கு முன்பு நிற்கத் துவங்கி பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. எட்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நான் அறிமுகமானது எல்லோருக்கும் தெரியும். அப்பா தயாரித்த படங்களில் நடிக்கத் துவங்கினேன். இன்னும் சொல்லப்போனால் மீரா ஜாஸ்மினும் நானும் அப்பா தயாரித்த விளம்பரப் படம் மூலமாகத்தான் அறிமுகமானோம். அந்த விளம்பரம்தான் மீரா, பெரிய நாயகியாக உருவெடுக்கக் காரணம்.
"நாயகியாக நான் அறிமுகமானதில் இருந்து இந்த ஐந்து ஆண்டுகளும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறேன். அதிலும் நான் அறிமுகமான 'கீதாஞ்சலி' ரொம்பவே சிறப்பு வாய்ந்த படம். நாயகியாக அறிமுகமாகும் போதே... முதல் படத்திலேயே யாருக்கு இரட்டை வேடங்கள் கிடைக்கும்? அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்த்தது."
"தமிழில் விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்?' படத்தின் மூலம் அறிமுகமானேன். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்று தெரிந்ததும் வருத்தமாக இருந்தது. எனினும் அடுத்தடுத்து வெளியான 'நேனு சைலஜா' (தெலுங்கு), தமிழில் 'ரஜினி முருகன்' ஆகியவை பெரியளவில் வெற்றி கண்டன," இனி வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக் கப்போவதில்லை என முடிவெடுத்தது ஏன்? "காரணம் உள்ளது. 'நடிகையர் திலகம்' மாதிரி வாய்ப்பெல்லாம் ஓர் இளம் நடிகைக்கு கிடைப்பது அபூர்வம். ஆனால் எனக்குக் கிடைத் தது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். "ஆனால் ஒரு பிரச்சினை. ஒருநாள் விமான நிலையத்தில் இருந்தபோது, ஒரு பாட்டி என் அருகே வந்து உட்கார்ந்து என்னையே உற்றுப் பார்த்தார். பிறகு எனது கன்னத்தைப் பிடித்து, 'நீ சாவித்திரி தானேம்மா?' என்று கேட்டார்.

