மனீஷா: கவனமாக இருப்பேன்

மனீஷா: கவனமாக இருப்பேன்

2 mins read
a816d299-a675-4200-975e-95691fbcf843
-

குறுகிய காலத்திலேயே நல்ல நடிகை என்று கோடம்பாக்க புள்ளிகளிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் மனீஷா யாதவ். எனினும் பெரிய வெற்றியை ருசிக்காததால் முன்னணி நடிகையாக மிளிர முடியவில்லை. இந்நிலையில் திருமணமும் செய்துகொண்டுள்ளார். எனினும் தொடர்ந்து நாயகியாகத்தான் நடிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம். இது சாத்தியம்தானா? என்று கேட்டால் மனீஷாவுக்குக் கோபம் வருகிறது.

"எனக்கென்ன நாற்பது வயதா ஆகிவிட்டது? ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்... இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் திருமணமாகிவிட்டது. எனது காதலரைத்தான் திருமணம் செய்துகொண்டேன். பெங்களூருவில் சிறப்பாக நடந்த திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

"அதனால்தான் ஊடகங்களிடம் வெளிப்ப டையாகத் தெரிவித்தேன். ஒரு பெண்ணின் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதே திருமணம் தான்.

"எனது கணவர் என்னுடைய உணர்வு களை முழுமையாக உணர்ந்தவர். அவர் கொடுத்த உற்சாகம்தான், மீண்டும் நான் சினிமாவில் நடிக்கக் காரணம். 'நல்ல படங்களில் நடிக்க வேண்டும். நீ வெற்றி பெறுவதே மகிழ்ச்சி தரும்' என்று சொல்லி, என் மேல முழு நம்பிக்கை வைத்து நடிக்க அனுமதித்துள்ளார்.

ஒரு பெண்ணுக்கு இதைவிட வேறென்ன சுதந்திரம் வேண்டும்? தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். ஆனால் அக்கா, அண்ணி பாத்திரங்களை ஏற்க மாட்டேன். அதேசமயம் ஒரு படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க தயங்கமாட்டேன்.

'வழக்கு எண் 18/9', 'ஆதலால் காதல் செய்வீர்', 'ஜன்னல் ஓரம்', 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'ஒரு குப்பைக் கதை' உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள மனீஷா, தமிழில் சரளமாகப் பேசுகிறார். "திருமணமான நிறைய கதாநாயகிகள் மறுபடியும் சினிமாவில் நடித்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஓரளவு கவர்ச்சியாகவும் நடிக்கின்றனர்.