ஜோதிகா: மறுபதிப்பு என்பது சவால்

ஜோதிகா: மறுபதிப்பு என்பது சவால்

1 mins read
779931e0-e7e0-454a-abe7-f5e872b2b95e
-

'மொழி' படத்தைப் பார்த்தவர்கள் ஜோதிகாவின் ரசிகர்களாவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இப்படம் வெளியாகும் போது திருமணம் செய்துகொண் டார். இனிமேல் நடிக்கமாட்டார் என்று கூறப்பட்டது. எனினும் திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும் என ஜோதிகா விரும் பியபோது, அவரது புகுந்த வீட்டார் அதற்குத் தடைவிதிக்கவில்லை என்பதுதான் மகிழ்ச்சி தரும் விஷயம். கிட்டத்தட்ட பத்து வருடங்க ளுக்குப் பின் 'காற்றின் மொழி' படத்தில் நடிக்க அழைத்த இயக் குநர் ராதாமோகனுக்குச் சம்மதம் சொன்ன ஜோதிகா, அதே துரு துரு, அதே குண்டுக் கண்களோடு நடிப்பில் அசத்தி உள்ளார். விதார்த், லட்சுமி மஞ்சு உள் ளிட்ட முக்கிய கலைஞர்கள் பலரும் நடித்திருக்கும் இப்படத்தில், ஜோதிகாவுக்கு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேடம்.

இந்நிலையில் மறுபதிப்பு படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத்தான் இருக்கும் என்கிறார் அவர். "இது மறுபதிப்பு படம். நான் அசல் பதிப்பைப் பார்த்ததே கிடை யாது. கதையோடு சேர்ந்து பய ணம் செய்து நடித்தேன். 'மொழி' படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. "இவ்வளவு நீண்ட இடை வெளிக்குப் பிறகு ராதாமோக னுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரிய வில்லை. அதே நேர்மறையான உணர்வு," என்றார் ஜோதிகா.