திரைப்படம் எடுப்பது மிகவும் சிரமமான வேலை என்றால், விநியோகிப்பாளர் களை அழைத்து வந்து ஒரு படத்தைப் பார்க்க வைப்பது அதைவிட மிகவும் கடினமான வேலை என்கிறார் நடிகர் உதயா. தற்போது தாம் நடித்து முடித்துள்ள 'உத்தரவு மகாராஜா' படத்தை விளம் பரப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். "இந்தக் காலக்கட்டத்தில் படங்கள் தயாரிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. குறைந்த பொருட் செலவில் தயாராகும் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் கூடு தல் உதவிகளைச் செய்ய வேண்டும். "எதிர்வரும் 16ஆம் தேதியன்று குறைந்த பொருட்செலவில் தயாரான படங்களை மட்டும் வெளியிடத் தயா ரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்திருந் தது.
இதையடுத்தே இந்தப் புதுப் படத்துக்கான விளம்பரப் பணியைத் துவங்கினேன். "இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள 'அடங்க மறு' ஆகிய படங்களும் இதே தேதியில் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படங் கள் பாதிக்கப்படாதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார் உதயா. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகிய இரண்டிலும் தாம் உறுப்பினராக இருப்பதாகச் சுட்டிக்காட்டும் அவர், சிறு பட்ஜெட் படங்களைப் பெரிய நடிகர்கள் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"ரசிகர்கள் நான் நடித்த படத்தைப் பார்க்க வருவார்களா அல்லது அண் ணன்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோரைப் பார்க்க திரை யரங்கம் வருவார்களா? "எனவே இருவரும் தங்களுடைய படங்களின் வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்பதே எனது வேண்டு கோள். இருவரும் மனம் வைத்தால் தான் என்னைப் போன்ற நடிகர்கள் வாழமுடியும். குறைந்த பட்ஜெட் படங் களும் வெற்றி பெற்று தயாரிப்பாளர்களை வாழவைக்கும்," என்கிறார் உதயா.
'உத்தரவு மகாராஜா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

