வைபவ், சோனம் பாஜ்வா இணைந்து நடித்துள்ள படம் 'காட்டேரி'. இது திகிலும் நகைச்சுவையும் கலந்த படமாக உருவாகி வருகிறதாம். டீகே இயக்கியுள்ளார். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா ஆகிய இருவரும் மற்ற இரு கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பட வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
திகில், நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வருகிறது 'காட்டேரி'
1 mins read
-

