அராத்து ஆனந்திக்கு அமோக ஆதரவு

அராத்து ஆனந்திக்கு அமோக ஆதரவு

2 mins read
67bb7eca-19f8-48d0-87eb-b0f5f1ae5f67
-

இதுவரையிலும் அமைதியான பெண்ணாக நடித்து வந்த சாய் பல்லவி 'மாரி 2' படத்தில் 'அராத்து ஆனந்தி'யாக அடித்து ஆடியிருக்கிறாராம். பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'மாரி' படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அனி ருத்தின் அனல் பறக்கும் இசையைக் கொண்ட அந்தப் படத்தில் தனு‌ஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரோபோ சங்கர் கூட்டணி நகைச் சுவையில் கலக்கி இருந்தது. முன்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் வில்லனாக அவதாரம் எடுத்திருந்தார்.

இந்த நிலையில், மாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தனு‌ஷின் வுண்டர் பார் நிறுவனம் இந்தப் படத் தைத் தயாரிக்கிறது. இயக் கு ந ர் = நா ய க ன் = கா மெ டி கூட்டணி அதேதான் என் றாலும் நாயகியும் வில்ல னும் மாறியுள்ளனர். நாய கியாக சாய் பல்லவியும் வில்லனாக மலையாள நடிகர் டொவினோ தாமசும் நடிக்கிறார்கள். அதேபோல, தனு‌ஷுக்கும் அனிருத்துக் கும் இடையே மனக்கசப்பு இருப்பதால் இசையமைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

'மாரி 2' படத்தின் முதல் பார்வைப் புகைப்படங்கள் நேற்று வெளியாகின. 'அராத்து ஆனந்தி' என்ற கதாபாத்தி ரத்தில் வடசென்னையில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் பெண் தோற்றத்தில் வெளியான சாய் பல்லவியின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளன. இப்போதைக்கு டுவிட்டர் சமூக ஊடகத்தில் அந்தப் படங்களே பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகின்றன.

மருத்துவம் படித்திருந்தாலும் நடனத் திலும் வெளுத்து வாங்கக்கூடிய சாய் பல்லவி 'மாரி 2' படத்தில் நடனத்தில் பட் டையைக் கிளப்பி இருப்பதாகச் சொல்லப் படுகிறது. காரணம், இந்தப் படத்தில் இவரை ஆட்டுவித்திருப்பது பிரபுதேவா. இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் கதாநாயகனாக நடித்து வருபவருமான கிருஷ்ணா, 'மாரி 2'ல் தனு‌ஷின் நண்ப னாக நடிக்கிறார். வித்யா பிரதீப், வரலட்சுமி உட்பட இன்னும் பலர் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது. 'மாரி' மூன்றாம் பாகத்திற்கான முடிச்சுடன் இரண்டாம் பாகம் நிறைவடையும் என்பது உபரித் தகவல்.