தனது அந்தரங்கப் படங்கள் வெளி யானதில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் அக்ஷரா ஹாசன். அண்மையில் நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளான அக் ஷராவின் அந்தரங்கப் புகைப் படங்கள் இணையத்தில் வெளி யாகி, சமூக ஊடகங்களில் தீயாகப் பரவின. இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அக் ஷரா புகாரளித்து இருக்கிறார். தனது அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் இவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அக்ஷரா, "அண்மை யில் எனது அந்தரங்கப் புகைப்படங் கள் சில இணையத்தில் வெளி யாகின. இதை யார், எதற்காகச் செய்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், பிறழ்மனம் கொண்ட சிலரின் இச்சைக்காக ஓர் இளம் பெண்ணை இப்படிப் பழியாக்குவது துரதிருஷ்டவசமானது.
"ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தை சிலர் கவர்ச்சித் தலைப்பு களுடன் பகிரும்போதும் நான் ஆழ மாகக் காயப்படுத்தப்படுகிறேன். என் மீதான அத்துமீறலில் ஈடுபடு வோர் அதிகமாகின்றனர். நானோ கையறுநிலையில் இருக்கின்றேன். "இந்தியாவே 'மீடூ' இயக்கத்தால் விழித்துக் கொண்டுள்ள சூழலில் கூட வக்கிர மனம் படைத்த சிலர் ஓர் இளம்பெண்ணின் புகைப்படங் களைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடை கின்றனர்.
"அந்தப் புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் உண்மை தெரியவரும். "இணையவாசிகள் எனது படங் களைப் பகிர்ந்து என்னை இழிவு படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் வாழுங்கள்! மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அத்துமீறாமல் அவர்களையும் மதிப்போடு வாழவிடுங்கள்," என்று உருக்கமாகப் பதி விட்டுள்ளார் அக்ஷரா.

