நடிகர் விஷால் நடித்து வெளிவந்திருக்கும் 'சண்டக்கோழி 2' திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் விஷால் விரைவில் இயக்குநராகவும் ஆக இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய நீண்ட நாள் கனவு நனவாக இருக்கிறது. முழுவதும் விலங்குகளை மையப்படுத்தி குறிப்பாகத் தெரு நாய்களை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
விஷாலின் கனவு நனவாகிறது
1 mins read
-

