நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாடிய தீபாவளி

நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாடிய தீபாவளி

1 mins read
3110ad7e-9a6d-48be-9de6-2cdaed704d63
-

நடிகை நயன்தாரா தனக்கு நெருக்கமானவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. திரையுலகில் 'லேடி சூப்பர் ஸ்டாராக' வலம் வரும் நயன்தாராவின் படங்கள் அண்மைக்காலமாக தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. 'அறம்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்பொழுது நடிகர் அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் தனது 63வது படமான 'ஐரா' படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா. இந்தத் தீபாவளிக்கு தனது படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் திரைத் துறையிலிருக்கும் தனது நெருக்கமான நண்பர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். இந்தக் கொண்டாட்டத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லி, டிடி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெடிச் சத்தமில்லாமல் நடந்த இந்தக் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை "சிறந்த மனிதர்களுடன் சேர்ந்து கொண்டாடும்போதுதான் ஒரு பண்டிகையே சிறப்பாக அமையும். இந்த ஒற்றுமை, மகிழ்ச்சி, அன்பு இன்னும் பல நாட்களுக்குத் தொடரும்," என்று தொகுப்பாளர் டிடி பதிவிட்டுள்ளார்.