தனு‌ஷுடன் ஜோடி சேராத லட்சுமி

தனு‌ஷுடன் ஜோடி சேராத லட்சுமி

1 mins read
9fe32991-b47b-44ae-b30f-8472b39c21ec
-

தனுஷ் படத்தில் லட்சுமி மேனன் நடிப்பதாக வெளிவந்த தகவல் உண்மையல்லவாம். இயக்குநர் ராம்குமார் இதைத் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'முண்டாசுபட்டி', 'ராட்சசன்' படங்களை இயக்கிய ராம்குமார், அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தற்போது அதற்கான கதை எழுதும் பணியில் அவர் ஈடுபட் டுள்ள நிலையில், இப்படத்தில் தனுஷ் ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் ராம்குமார். "இன்னும் கதை விவாதம் முடியவில்லை. தனுஷ் நடிப்பது மட்டுமே உறுதி," என்று சொல்லும் ராம்குமார், 'ராட்சசன்' படம் தெலுங்கில் மறுபதிப்பு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.