படப்பிடிப்பின்போது தூங்கிய ரெஜினா

1 mins read
18c35a29-5b82-49ca-b292-3885b66e893e
-

படப்பிடிப்பின்போது தனது தோழியும் சக நாயகியுமான ரெஜினா தன்னை மறந்து தூங்கிவிடுவார் என்கிறார் சஞ்சிதா ஷெட்டி. இவ்விரு நாயகிகளும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பார்ட்டி' படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மூன்றாவது நாயகியாக நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் இப்படம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சஞ்சிதா. "ரெஜினா மிகவும் வெளிப்படையான நடிகை. படப்பிடிப்பின்போது தூக்கம் வந்தால் கொஞ்சம்கூட தயங்கமாட்டார். அங்குள்ள ஏதேனும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிடுவார். "அதிலும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி செய்தேன், முடியவில்லை. ஒரு விருந்து நிகழ்ச்சியில்தான் இயக்குநர் வெங்கட் பிரபுவை சந்தித்தேன். அப்போது என் நடிப்பை பாராட்டியவர் உடனடியாக வாய்ப்பு தந்துள்ளார்," என்று சிரிக்கிறார் சஞ்சிதா.