'மெரினா புரட்சி' படத்துக்கு மீண்டும் தடை: தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தி

'மெரினா புரட்சி' படத்துக்கு மீண்டும் தடை: தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தி

1 mins read
2b8ca4c8-426c-4ec4-844b-b6615cf59119
-

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் படமாக உருவாகி உள்ளது 'மெரினா புரட்சி'. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்கவில்லை. மாறாக சீராய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சீராய்வுக் குழுவும் காரணம் ஏதும் கூறாமல் படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாம். "காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம்தான் இந்த தடைக்குக் காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது," என்று படக்குழுவினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.