மீண்டும் நடிக்கும் இலியானா

மீண்டும் நடிக்கும் இலியானா

1 mins read
31e45205-4416-417f-b73e-b3b2a62892ca
-

மீண்டும் தெலுங்குப் படங்களில் நடிக்கத் துவங்கி உள்ளார் இலியானா. தமிழில் 'நண்பன்' படத்தில் நடித்த பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இலியானாவை அதன் பிறகு ஆளையே காணவில்லை. இந்திப் படம் ஒன்றில் நடித்த பிறகு நடிப்பை விட்டுவிட்டு ஆறு ஆண்டுகளாக அறவே ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், 'அமர் அக்பர் ஆண்டனி' எனும் படம் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பி உள்ளார். "6 ஆண்டுகளுக்குப் பிறகு ரவிதேஜா படத்தில் நடிக்கிறேன். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தைப் பிடித்துத் தரும் என்று நம்புகிறேன். கடும் உடற்பயிற்சி மூலம் பழைய உடல் வாகு திரும்ப வரும் என உறுதி யாக நம்புகிறேன்," என்கிறார் இலியானா.