'சாவித்ரி' படத்தில் நடித்தபோது கீர்த்தி சுரேஷை தொலைபேசி மூலம் பாராட்டிய ராஜமௌலி தன்னுடைய படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். 'சர்கார்' படத்தில் தன்னுடைய கதா பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நினைத்துத்தான் கீர்த்தி சுரேஷ் நடித்தார். ஆனால் படம் முழுவதும் தன்னை ஒரு பொம்மையைப்போல காட்சிப்படுத்தி இருப்பதைப் பார்த்து வருத்தத்தில் ஆழ்ந்தார் கீர்த்தி சுரேஷ். 'சர்கார்' படத்திற்குப் பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் தன்னுடைய சம்பளத்தை உயர்த் தலாம் என்று காத்திருந்தார். அவருடைய எண்ணங்கள் அனைத்தும் வீணாயின. இனி நடிக்க இருக்கும் படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத் துவம் இருந்தால் மட்டுமே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வது என்றும் அதற்கான உறுதிமொழியையும் எழுதி வாங்கிக் கொள் வது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் திறமை யாருக்கு இருந்தாலும் அவர்களைத் தேடி வாய்ப்புகள் வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் ராஜமௌலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்குக் கிடைத்திருக்கிறது. தற்பொழுது தமிழ்த் திரையில் முன்ன ணியில் இருக்கும் நாயகிகள் பெரும்பாலும் 30 வயதைத் தாண்டியவர்களாக இருக்கிறார் கள். அவர்களால் வயது குறைந்த நாயகர் களுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போகிறது. இந்த அனைத்து தகுதிகளும் கீர்த்தி சுரேஷுக்குப் பொருந்தி வருகிறது.
மேலும் இவரைப் படத்தில் நடிக்க வைத்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்ற பட்டியலில் தற்பொழுது முதல் இடத்தில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். 'ரஜினி முருகன்', 'தொடரி', 'ரெமோ', 'பைரவா', 'சாவித்ரி' என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்பொழுது தமிழ், தெலுங்கு திரைகளில் விஜய், சூர்யா, விக்ரம் என்று அனைத்து வயது முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் 'மகாநதி'. இந்தப் படம் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம்.

