தீபிகா, ரன்வீர் இத்தாலி சென்றதில் இருந்தே அவர்களின் திருமணம் தொடர்பான எந்தப் புகைப்படமும் வெளியாகவில்லை. திருமணம் நடக்கும் இடத்தில் பயங்கர கெடுபிடி இருந்தது. விருந்தினர்களுக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. அதனால் அவர்களின் திருமணப் புகைப்படங்களை அவர்களே வெளியிட்டால்தான் உண்டு என்ற நிலை ஏற்பட்டது.
அதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னுடைய இன்ஸ்டாகிராமில், பலகையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு மனித எலும்புக்கூடு படத்தைப் போட்டு, "ரன்வீர், தீபிகாவின் திருமண புகைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் ஒரு புகைப்படம் கூட வெளியாகாததால் காத்திருந்து காத்திருந்து அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்," என்று பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், "மேடம், நாங்க நினைத்ததைத் தான் நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள். ஒரு புகைப்படத்தைக்கூட வெளியிடாமல் உள்ளார்கள்," என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்தக் காதல் தம்பதிகள் தங்கள் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

