புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளி லேயே முகாமிட்டுப் பல்வேறு உதவி களை நடிகர்கள் ஜி.வி. பிரகாஷும் விமலும் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்த பிறகுதான் உண்மை நிலவரம் தெரிய வந்ததாகவும் அங்கு இயல்பு நிலை திரும்ப பல மாதங்கள் ஆகும் என்றும் ஜிவி. பிரகாஷ் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப் பாறையில் தான் படித்த கிராமத்துப் பள்ளிக்கூடம் புயலால் சேதமடைந்திருப்பதைக் கண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளார். பள்ளிக்கூடத்தைச் சீரமைக்கும் பணிகளில் உதவுவதாகக் கூறியுள்ளாராம்.
களத்தில் நின்று உதவும் நடிகர்கள்
1 mins read
-

