சில நொடிகளில் சாதனை படைத்த 'விஸ்வாசம்'

சில நொடிகளில் சாதனை படைத்த 'விஸ்வாசம்'

2 mins read
41897dc5-104a-45b0-a946-bf3662b934d2
-

நடிகர் அஜித் நடிப்பில் பொங்க லுக்கு வெளிவர இருக்கும் 'விஸ்வாசம்' படத்தின் 'மோஷன் போஸ்டர்' வெளிவந்து சில நொடி களில் ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்திருக்கின்றனர். 'தல' ரசிகர்கள் எவ்வளவோ கெஞ்சியும் படத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவந்தது இல்லை. இந்நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் 'தூக்குதுரைனா அடாவடி' என்று துவங்கும் 'மோஷன் போஸ்ட'ரை வெளியாக் கியது படக்குழு. போஸ்டரின் இறுதியில் 'தல' வெள்ளை முடியுடன் கெத்தாக வருகிறார்.

'போஸ்டர்' வெளியாகி ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் பார்த்து விருப்பம் தெரிவித்துள் ளனர். இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். அஜித், நயன்தாரா நடித்துள்ளனர். படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்தி ருக்கிறார். முதலில் இளம் அஜித் தோற்றத்தைப் படம் பிடித்த படக்குழுவினர், பின்பு அவரது முன்நிகழ்வுக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை படம் பிடித்ததாகக் கூறினர். மதுரை, தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி யில் படமாக்கினார்கள்.

இந்தப் படத்திற்குப் பிறகு அஜித், பாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அமிதாப்பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் தமிழ் மறுபதிப்பில் நடிக்க உள்ளார். இப்படத்தைத் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய இயக்குநர் வினோத் இயக்கயிருப்பதாக அண்மையில் சமூக வலைத் தளங்களில் தகவல் வெளி யாகியுள்ளது. இந்நிலையில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக எத்தனையோ நடிகர்கள் உதவி செய்கிறார் கள். ஆனால் நடிகர் அஜித் உதவி ஏதும் செய்யாமல் குடும்பத் துடன் கோவா சென்று விட்டாரே என்று சிலர் சமூக வலைத்தளங் களில் விமர்சித்தனர்.