நடிகை காயத்ரி ரகுராம் குடி போதையில் கார் ஓட்டி நள்ளிரவில் போலிசிடம் பிடிபட்டார். மறுநாள் அபராதம் செலுத்தி தன்னுடைய காரை எடுத்துச் சென்றது தற்போது திரையுலகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சார்லி சாப்ளின்', 'விசில்' படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் இவரைப் பலரும் அறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாறு பகுதியில் போலிசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது வெள்ளை நிற சொகுசுக் கார் ஒன்று அதிவேகத்தில் தாறுமாறாக வருவதைப் பார்த்து அந்த வண்டியை நிறுத்தி சோதனையிட்டனர்.
வண்டியில் இருந்த காயத்ரி அளவுக்கு அதிகமாக குடித்திருந்த தால் மது போதையைக் கண்டு பிடிக்கும் கருவியில் மூச்சுக் காற்றை ஊதும்படி போலிசார் கூறினர். ஆனால் காயத்ரி போலிசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தான் குடிக்கவில்லை என்று கூறி சோதனைக் கருவியில் ஊத மறுத்திருக்கிறார். ஊதவில்லை என்றால் அவரை அங்கிருந்து அனுப்ப முடியாது என்று போலிசார் கடுமையாகக் கூறியதால் வேறுவழியின்றி சோதனைக் கருவியில் ஊதியிருக் கிறார். சோதனை மூலம் அவர் அதிகமாகக் குடித்திருப்பதை அறிந்த போலிசார், அவரைக் கார் ஓட்டவேண்டாம் என்று கூறி, காவலர் ஒருவர் காயத்ரி ரகுராமை அவரது காரில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டார். பின்னர் அவரது காரை போலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றார். மறுநாள் ரூ.3,500 அபராதம் செலுத்தி வண்டியை எடுத்துச் சென்றார் காயத்ரி.
இது செய்தியாக வெளிவந்ததும் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் காயத்ரி, "ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வீட்டில் இருந்ததால் அந்த ஆவணங்களைச் சரி பார்க்கத்தான் போக்குவரத்துப் போலிஸார் என்னுடன் வந்தார். இந்தப் பொய்யான செய்தியை உருவாக்கியது குடித்துவிட்டுக் கார் ஓட்டி, சிக்கிய பத்திரிகை நிருபர் ஒருவர். வழக்கமான பரிசோதனைக்காக என் காரை நிறுத்தினேன். அந்த நிருபர்தான் தனக்குத் தோன்றியதை பத்திரிகையில் எழுதியுள்ளார்," என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதைப் பார்த்த இணையத் தளவாசிகள், "நீங்கள் குடிக்க வில்லை என்றால் ஏனம்மா நீங்கள் வண்டியை ஓட்டாமல் போலிஸ்காரர் வண்டியை ஓட்டினார்? பின்னர் ஏன் காலையில் அடையாறு போலிஸ் நிலையத்திற்கு நீங்கள் சென்றீர்கள்? ஏன் அபராதம் கட்டினீர்கள்?" என்று கிண்டலாக கேள்விகளை இணையத் தில் பதிவிட்டு வருகிறார்கள்.

