டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது தனு‌ஷின் 'மாரி 2'

டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது தனு‌ஷின் 'மாரி 2'

1 mins read
652fc1d0-6662-463a-87a8-a1a9705cf416
-

தனு‌ஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாரி 2'. இதில் தனு‌ஷும் சாய் பல்லவியும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். கிருஷ்ணா, வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உருவாகியுள்ளதாம். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளனர். டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.