ஒற்றைப் பாடலுக்கு நடனமாட இலியானா அறுபது லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டது தெலுங்கு திரையுலகத்தினரை அதிர்ச்சியில் வாய்பிளக்க வைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கி உள்ளார் இலியானா. ரவிதேஜாவுடன் 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ராம்சரண் தேஜாவும் கியரா அத்வானியும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தெலுங்குப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும்படி கேட்டு இலியானாவை அணுகி உள்ளனர். முதலில் தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறிய அவர், கடைசியில் அறுபது லட்சம் ரூபாய் தந்தால் கால்ஷீட் ஒதுக்க தயார் என்றாராம். அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் இலியானாவின் கண்ணில்படாமல் சட்டென மாயமாகிவிட்டதாகத் தகவல். இதற்கிடையே தமிழ்ப் படங்களில் நடிக்கவும் விரும்புகிறாராம் இலியானா. இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள தனது நலன் விரும்பிகள் சிலரை அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளாராம். வாய்ப்பு கிடைக்கும் எனவும் நம்புகிறாராம்.
வாய் பிளக்க வைத்த கதாநாயகி
1 mins read
-

